2 C
New York
Monday, December 29, 2025

ஹமாஸ் அமைப்பிற்கு தடை – சுவிஸ் அரசு திட்டம்.

சுவிட்சர்லாந்தில் பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பை  ஐந்து ஆண்டுகளுக்குத் தடை செய்யும் யோசனையை, சுவிஸ் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

ஹமாஸ் குழுவுடன் இணைந்த ஏனைய அமைப்புகளையும் தடை செய்யும் வகையில் இந்த யோசனை  அமைந்துள்ளது.

ஹமாசின் பாதுகாப்பு இல் இயங்கும் அமைப்புகளும்,  அதன் உத்தரவுப்படி அல்லது அதன் பெயரில் செயல்படும் அமைப்புகள் குழுக்களும் இந்த தடை யோசனைக்குள் உள்ளடங்கும்.

பாதுகாப்பு கொள்கை ஆணைக்குழுக்களிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும்.

 ஒரு அமைப்பு அல்லது குழு மீதான தடைக்கு எதிராக பெடரல் நிர்வாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம்.

மூலம் – Swissinfo

Related Articles

Latest Articles