16.6 C
New York
Thursday, September 11, 2025

சூரிச் கவுன்சிலர்களின் சம்பள உயர்வுக்கு எதிராக போர்க்கொடி.

சூரிச் நகர சபை  கவுன்சிலர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதற்கு எதிராக  SVP கட்சி போர்க்கொடி உயர்த்தியுளளது.

திட்டமிட்ட  கொடுப்பனவு அதிகரிப்பை  திட்டமிட்ட அபகரிப்பு என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

இழப்பீட்டு சட்டத்தை  எதிர்த்து மக்கள் வாக்கெடுப்பு மூலம் போராடப் போவதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது .

சூரிச் நகர சபை  உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் சொந்த சம்பளத்தை இரட்டிப்பாக்க விரும்புகிறார்கள்.

இதன்படி, உறுப்பினர்களின் அடிப்படை மாதாந்த இழப்பீடு தொகையை 260 பிராங்கில் இருந்து 1,000 பிராங்குகளாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொறுப்புள்ள அரசியல்வாதிகள் வெட்கமின்றி வரி செலுத்துவோரின் பணத்தால் தங்களை வளப்படுத்துகிறார்கள், என SVP  விமர்சித்துள்ளது.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles