8.3 C
New York
Sunday, March 29, 2026

2025இல் மின்கட்டணம் 10 வீதம் குறைகிறது.

அடுத்த ஆண்டில், மின்சார கட்டணம், சராசரியாக 10 சதவீதம் குறையும் என, மின்சார ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, குடும்பம்  ஒன்று, ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 29 சதங்களை மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இது இந்த ஆண்டை விட ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 3.14 சதம் குறைவாகும் என மின்சார ஆணையம் அறிவித்துள்ளது.

ஆண்டு முழுவதும், 4500 கிலோவாட் மின்சாரத்தை  நுகர்வு  செய்யும், ஒரு குடும்பம் சராசரியாக 1305 பிராங்குகள் மின்சாரக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

 இது 2024ஆம் ஆண்டை விட 141 பிராங்குகள் குறைவாகும்.

குடும்பத்திற்கான வலையமைப்பு செலவு ஒரு கிலோவாட்டுக்கு 12.71 முதல் 12.18  சதம் வரை குறையும்.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles