-0.7 C
New York
Sunday, December 28, 2025

பாடசாலைக்கு துப்பாக்கிச் சூடு அச்சுத்தல் – சிக்கிய சிறுவர்கள்.

Buchs உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியின், உடற்பயிற்சிக் கூட சுவரில் மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஸ்வஸ்திகா சின்னம், வரையப்பட்டு, “செப்டம்பர் 6 பாடசாலை துப்பாக்கிச் சூடு” என அச்சுறுத்தல் வாசகம் எழுதப்பட்டிருந்தது.

இதுபற்றி பாடசாலை, பெற்றோருக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.

அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துக்கொள்வதாக அதில் கூறப்பட்டிருந்தது.

பொலிஸ் விசாரணைகளை அடுத்து, 11 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு சிறுவர்களின் குறும்புத்தனம் இது என கருதுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் அல்லது மாணவர்களுக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

அவர்களிடம் விசாரணை  விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் -20min.

Related Articles

Latest Articles