-0.7 C
New York
Sunday, December 28, 2025

நிலச்சரிவினால் 2200 சுற்றுலாவிகள் நிர்க்கதி.

சாஸ் பள்ளத்தாக்கில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், பிரதான சாலை 212 ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டதால்,  பிரதான வீதி Stalden மற்றும்  Saas Balen இடையே மூடப்பட்டுள்ளது.

2200 சுற்றுலாப் பயணிகள் தற்போது சாஸ் பள்ளத்தாக்கில் சிக்கியுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் சுவிஸ் நாட்டவர்  என்றும், மற்ற சுற்றுலாப் பயணிகள் பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் ஜெர்மனியில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்குமிடத்தை தேர்வுசெய்வதில்  எந்தச் சிக்கலும் இல்லை என்றும், சாஸ் பள்ளத்தாக்கில் சுமார் 10,000 படுக்கைகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles