26.3 C
New York
Sunday, June 22, 2025

புடினின் மூத்த மகன் சுவிசில் பிறந்தது அம்பலம்.

ரஷ்ய  ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகன்களில் ஒருவர்  2015 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் பிறந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரெம்ளினுடன் தொடர்புடைய நபர்களின் குற்றச் செயல்களைக் கண்காணிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இணையத்தளமான டோசியர் சென்டர் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

புடினின் இல்லத்தில் பணிபுரியும், பெயர் வெளியிடப்படாத ஆதாரத்தை மேற்கோள் காட்டி இந்த அறிக்கை,வெளியிடப்பட்டுள்ளது.

புடினின் நீண்ட கால துணையான, அலினா கபேவா, தெற்கு சுவிட்சர்லாந்தின் லுகானோவில் உள்ள ஒரு கிளினிக்கில் அவர்களின் முதல் மகனைப் பெற்றெடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரஷ்யாவில் வால்டாய் ஏரியில் உள்ள அவர்களது இல்லத்தில், வசிக்கும், புடின் –கபேவா தம்பதியரின், 9 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகன்களின் வாழ்க்கை நிலைமைகள் பற்றிய அரிய புலனாய்வுத் தகவல்களை டோசியர் சென்டர் வெளியிட்டுள்ளது.

புடின் 2013 இல் தனது மனைவி லியுட்மிலாவை விவாகரத்து செய்தார், ஆனால் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான கபேவாவுடனான தனது உறவை ஒருபோதும் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை.

சுவிட்சர்லாந்து நீண்ட காலமாக பணக்கார ரஷ்ய குடிமக்கள் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கு விருப்பமான இடமாக இருந்து வருகிறது.

ரஷ்ய பெண்கள், சுவிஸ் தனியார் கிளினிக்குகளில் வழங்கப்படும் தரமான கவனிப்பால் ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

மூலம் – Swissinfo

Related Articles

Latest Articles