21.6 C
New York
Wednesday, September 10, 2025

கொழும்பு மாவட்டத்தில் அதிகபட்ச தபால் வாக்குகள் பதிவு.

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெரும்பாலும் நிறைவடைந்துள்ளது.

கடந்த 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை, தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்ற அரச ஊழியர்கள், அதிகாரிகள், முப்படையினர், பொலிசார் தபால்மூல வாக்களிப்பில் வாக்களித்தனர்.

7 இலட்சத்துக்கும் அதிகமானோர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்களில் 80 வீதமானோர் வாக்களித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில்் 95 வீதம் தபால் வாக்குகள் பதிவாகி விட்டதாக, மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தில் வாக்களிக்காத அரச ஊழியர்கள், எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் மாவட்டச் செயலகங்களில் தமது வாக்குகளை அளிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles