21.6 C
New York
Wednesday, September 10, 2025

பாடசாலைக்கு குண்டு மிரட்டல்- 14 வயது மாணவன் கைது.

Valais இல் உள்ள Goubing orientation பாடசாலைக்கு நேற்று காலை குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து  மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பாடசாலை மற்றும் சுற்றுப் புறங்களில் பொலிசார் தேடுதல்களை மேற்கொண்டனர்.

எனினும் சந்தேகத்துக்குரிய எந்தப் பொருளும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இது பொய்யான எச்சரிக்கை என கண்டறியப்பட்டது.

இதையடுத்து நேற்று மாலை பாடசாலை ஒப்படைக்கபபட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார், 14 வயது மாணவன் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles