சூரிச் குடியிருப்பாளர்களின் உணவுப் பொருள் கொள்வனவு பழக்கம் பற்றிய தகவல்களை Uber Eats வழங்கியுள்ளது.
இதற்கமைய, கடந்த ஆண்டு ஒரு பயனர் 796 முறை Uber Eats மூலம் உணவுப் பொருட்களை வாங்கியுள்ளார்.
- Advertisement -

Schwamendingen இல் பர்கர்கள் மற்றும் பீட்சா பிரபலமாக இருந்தாலும், Seefeld இல் சைவ உணவுகள் மற்றும் சாலட்டுகள் மிகவும் பிரபலமாக உள்ளன.
காலை 6 மணி முதல் 10 மணி வரை காலை உணவு: 13 சதவீதம்.
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மதிய உணவு: 32 சதவீதம்.
மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இரவு உணவு: 38 சதவீதமும் ஓடர் செய்யப்படுகிறது.
அதிகளவு ஓடர் செய்யப்படும் உணவுகளின் வரிசை 1. பர்கர்கள் (சீஸ் பர்கர்கள் உட்பட)2: கபாப், 3: பிடா/கைரோஸ் , 4: பீஸா, 5: Poke Bowl என உள்ளது.
மூலம்- 20min


