0.8 C
New York
Monday, December 29, 2025

சுவிசில் மின்கட்டணம் உயரப் போகும் 5 இடங்கள்.

அடுத்த ஆண்டு சுவிற்சர்லாந்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும், 5 இடங்களில் அடுத்த ஆண்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிச்சில் சராசரியாக மின்சாரக் கட்டணம் 12 வீதத்தினால் குறையும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய ஆண்டுக்கு 2500 கிலோவாட் மின்சாரத்தை நுகர்வு செய்யும்3 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கான மின்சாரக் கட்டணம், 110 பிராங்கினால் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலே அடுத்த ஆண்டில்  மின்சாரக் கட்டணம் அதிகரிக்கவுள்ள 5 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Andelfingen, Fällanden, Glattfelden, Marthalen, Weiach ஆகிய இடங்களிலேயே மின்சாரக் கட்டணம் அதிகரிக்கவுள்ளது.

மின் உற்பத்தி மூலம், உற்பத்திச் செலவு, மின் விநியோக கட்டமைப்பு பராமரிப்புச் செலவுகள், வரிகள் போன்ற 4 முக்கியமான காரணிகளின் அடிப்படையிலேயே, மின்சாரக் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் -Zueritoday

Related Articles

Latest Articles