Lucerne கன்டோன், சிறைக் கைதிகளுக்கு செல்போன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.
போதைப்பொருள், பணம், மதுபானங்கள் மற்றும் பிற ஆபத்தான பொருட்கள் தவிர, மொபைல் போன்களும் சிறையில் தடை செய்யப்பட்டுள்ளன.
- Advertisement -

ஆனால், திறந்தவெளி சிறைகளில் உள்ள கைதிகள் விரைவில் ஸ்மார்ட்போன் வைத்திருக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதன்படி, Wauwilermoos இல் உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் முன்னோடியாக இந்த அனுமதி வழங்கப்படவுள்ளது.
இதற்காக, ஒக்டோபர் 1-ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் ஒரு பகுதி திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக Lucerne அரசாங்கம் அறிவித்துள்ளது.
20min


