20.4 C
New York
Monday, August 17, 2026

வெளிநாடுகளுக்கு 11.3 பில்லியன்  பிராங் ஒதுக்கீடு.

அடுத்த நான்கு ஆண்டுகளில்  11.3 பில்லியன்  பிராங் நிதியை வெளிநாடுகளில் செலவிடுவதற்கு, சுவிஸ் செனட்  ஒப்புதல் அளித்துள்ளது.

சர்வதேச ஒத்துழைப்புக்கான பெடரல் கவுன்சிலின் மூன்று தீர்மானங்களுக்கு செனட் சபை தெளிவான பெரும்பான்மையுடன் அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்த தீர்மானங்களுக்கு எதிராக சுவிஸ் மக்கள் கட்சியும் அடிப்படைவாதிகளும் வாக்களித்தனர்.

இந்த நிதியை நிறுத்தவும், குறைக்கவும் சுவிஸ் மக்கள் கட்சி உறுப்பினரும் அடிப்படைவாத உறுப்பினரும் கொண்டு வந்த தீர்மானங்கள் வெற்றி பெறவில்லை.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles