-0.7 C
New York
Sunday, December 28, 2025

நியூயோர்க் புறப்பட்ட விமானம் அவசரமாகத் திரும்பியது.

சூரிச்சிலிருந்து நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் சென்ற சுவிஸ் விமானம் LX18 விமானம், குறுகிய நேரத்தில் மீண்டும் சூரிச்சிற்கே திரும்பியுள்ளது.

விமான  அறையில் காணப்பட்ட காற்றழுத்தப் பிரச்சினையின் காரணமாகவே விமானம் திரும்பியதாக  சுவிஸ் நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

இதன் விளைவாக, அவசர சமிக்ஞை அனுப்பப்பட்டதுடன், விமானிகள் உயரத்தைக் குறைக்கத் தொடங்கினர்.

கீழ் இறங்கும் போது, பயணிகள் ஒக்ஸிஜன் முகமூடிகளை அணியுமாறு கேட்கப்பட்டனர்.  இது ஒரு சாதாரண பாதுகாப்பு நடைமுறை என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையிறங்குவதற்கு முன்னர், எயர்பஸ் ஏ330  விமானம், சில நிமிடங்களுக்கு ஆராவ் பகுதியில் வட்டமிட்டது.

205 பயணிகளுடன் இருந்த விமானம் சூரிச் விமான நிலையத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பாதுகாப்பாக தரையிறங்கியது.

நியூயோர்க் பயணத்திற்காக விமானத்தில் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டதால், சூரிச்சில் தரையிறங்கும் போது அதிக எடை காரணமாக பிரேக்குகள் மிகவும் சூடாகின.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்திற்கு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டதாக சுவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles