16.6 C
New York
Thursday, September 11, 2025

பாதசாரியை தாக்கி கொள்ளையடித்த மர்மநபர்கள்.

Wetzikon இல் வெள்ளிக்கிழமை இரவு  இனந்தெரியாத நபர்கள் பாதசாரி ஒருவரை  தாக்கி கொள்ளையடித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பாதசாரியான 26 வயதுடைய நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்தச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

26 வயதான சுவிஸ் நபர் நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​மூன்று நபர்கள் கடினமான பொருளால் தாக்கி கீழே தள்ளிவிடப்பட்டுள்ளார்.

இதனால் அவர் சுயநினைவை இழந்தார்.  அவரிடம் இருந்து  குற்றவாளிகள் அலைபேசி,  கைக்கடிகாரம் மற்றும் பணப்பையை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தின் சாட்சிகளை சூரிச் கன்டோனல் பொலிசார் தேடி வருகின்றனர்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles