0.8 C
New York
Monday, December 29, 2025

ஷெங்கன் விமான நிலையங்களில் இறுக்கமடையப் போகும் பாதுகாப்பு.

ஷெங்கன் ( Schengen ) பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க, பல விமான நிலையங்கள் புதிய நுழைவு முறையை அறிமுகப்படுத்தவுள்ளன.

ஷெங்கன் உறுப்பினராக, சுவிட்சர்லாந்திற்கும் இது  பொருந்தும்.

Limmatter Zeitung  அறிக்கையின்படி அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நுழைவு மற்றும் வெளியேறும் அமைப்பினால், நவம்பர் 10 ஆம் திகதி  முதல் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஷெங்கன் பகுதிக்குள் நுழைவது சிக்கலானதாக இருக்கும்.

மூன்றாம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்காக விமான நிலையங்களில் டிஜிட்டல் ஆவணங்கள் உருவாக்கப்படும்.

இந்த ஆவணங்களில் அவர்களின் அடையாள ஆவணங்களில் உள்ள தரவுகள் மட்டுமின்றி, ஒரு கையில் நான்கு விரல்களின் ரேகை அடையாளங்கள், முகப் படம் மற்றும் ஸ்கான் போன்ற பயோமெட்ரிக் தகவல்களும் இருக்கும்.

இந்த நடவடிக்கைகள் ஷெங்கன் பகுதியை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கம் கொண்டவை.

மூன்றாம் நாட்டுப் பிரஜைகளின் அடையாளத்தையும் தங்கியிருக்கும் காலத்தையும் எல்லா நேரங்களிலும் அதிகாரிகள் அறிந்து கொள்ள முடியும்.

கூடுதல் பாதுகாப்பு,  விமான நிலையங்களுக்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்தும்.

சூரிச் விமான நிலையம் விசா தேவையில்லாத மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளைச் சரிபார்க்க முன்பை விட மூன்று மடங்கு அதிக நேரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறது.

ஜெனிவா மற்றும் பாசல் விமான நிலையங்களும் புதிய நுழைவு முறையால் சிக்கலை எதிர்கொள்ளும்.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles