-0.1 C
New York
Sunday, December 28, 2025

சுவிஸின் ‘ஆல்ப்ஸ்’ சூப்பர் கணினி அறிமுகம்- வேகம் தெரியுமா?

சுவிட்சர்லாந்து புதிய சூப்பர் கணினியை உருவாக்கியுள்ளது.

ஆல்ப்ஸ் (Alps) என்று பெயரிடப்பட்டுள்ள  இந்த கணினியை, லுகானோவில் உள்ள தேசிய சூப்பர் கணினி மையத்தில் பொருளாதார அமைச்சர் Guy Parmelin அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.

இது உலகின் மிக சக்திவாய்ந்த சூப்பர் கணினிகளில் ஒன்றாகும்.

வானிலை முன்னறிவிப்புகளுக்கு, MeteoSwiss, மத்திய அலுவலகம்  சூப்பர் கணினியை பயன்படுத்துகிறது.

இது காலநிலை மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் (AI) கணக்கீடுகளையும் செய்யும்.

ஆல்ப்ஸ் கணினி ஒரு நாளில் செய்யக்கூடிய கணக்கீடுகளைச் செய்ய, ஒரு நிலையான மடிகணினிக்கு 40,000 ஆண்டுகள் தேவைப்படும் என்று சுவிஸ் தேசிய சூப்பர் கணினி மையத்தின் (CSCS) துணை இயக்குநரும் தகவல் தொடர்புத் தலைவருமான Michele De Lorenzi, Keystone-SDA தெரிவித்தார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles