16.6 C
New York
Thursday, September 11, 2025

சுவிசில் ஒரு நாள் விடுமுறைக்கு 225 பிராங் தேவை.

சுவிட்சர்லாந்தில் ஒரு நாள் விடுமுறையைக் கழிப்பதற்கு 225 பிராங்குகள் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் விடுமுறைக்கு செல்வதற்கு நிறையப் பணம் தேவைப்படும்.

ஹோட்டலில் தங்குதல், உணவகங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கான நுழைவு கட்டணம் ஆகியவை சுவிசின் அண்டை நாடுகளை விட கணிசமாக விலை அதிகம்.

பயணக் காப்புறுதி நிறுவனமான Hellosafe இன் புதிய ஆய்வின்படி, சுவிட்சர்லாந்தில் ஒரு நாள் விடுமுறைக்கு 225 பிராங்குகள் செலவாகும்.

ஆய்வு செய்யப்பட்ட 136 நாடுகளின் தரவரிசையில் சுவிட்சர்லாந்து ஆறாவது இடத்தில் உள்ளது.

பார்படோஸ் (293 பிராங்), ஆன்டிகுவா மற்றும் பார்புடா (274 பிராங்), செயின்ட். கிட்ஸ் மற்றும் நெவிஸ் (241 பிராங்), மாலைதீவுகள் (233 பிராங்) மற்றும் கிரெனடா (230 பிராங்) ஆகியவை செலவு அதிகமுள்ள சுற்றுலா நாடுகளாக உள்ளன.

சுற்றுலாப் பயணி செல்லும் நாட்டில் மேற்கொள்ளும் அனைத்து செலவுகளும் இதில் அடங்கும்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles