-0.1 C
New York
Sunday, December 28, 2025

நீலநிற சாரதி அனுமதிப்பத்திரம் அடுத்த மாதத்துடன் காலாவதி.

நீல நிற சுவிஸ் காகித சாரதி அனுமதிப்பத்திரம் வரும் ஒக்டோபர் மாத இறுதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் முதல், அனைத்து சாரதிகளும் கிரெடிட் கார்ட் அளவிலான அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

சோதனையின் போது, பழைய நீல சாரதி அனுமதிப்பத்திரத்தை காண்பிப்பவருக்கு 20 பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும் என, வீதிப் போக்குவரத்து அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்த சாரதி அனுமதிப் பத்திரங்கள்  சர்வதேச பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்யாததே அது ரத்துச் செய்யப்படுவதற்குக் காரணமாகும்.

ஓகஸ்ட் மாத இறுதியில் 330,000 பேர் இன்னும் அத்தகைய நீல நிற சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ளனர்.

புதிய அனுமதிப்பத்திரத்தைபெற சாரதிகள் அவர்கள் வசிக்கும் கன்டோனில் உள்ள வீதி போக்குவரத்து அலுவலகத்தை – அல்லது இணையவழியில் தொடர்பு கொள்ளலாம்.

கிரெடிட் கார்ட் வடிவத்திலான புதிய அனுமதிப்பத்திரம் சில நாட்களுக்குள் தபால் மூலம் அனுப்பப்படும்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles