Oerlikon Ost ரயில் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக சூரிச் நகர பொலிசார் தெரிவித்தனர்.
- Advertisement -

மருத்துவக் குழுவினரும் பொலிசாரும் சம்பவ இடத்தில் காணப்பட்டனர். எனினும் யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.
விபத்தின் காரணமாக, Oerlikon Ost நிலையம் மற்றும் Seebach இடையே இரு திசைகளிலும் டிராம் லைன் 14 தற்காலிகமாக தடைபட்டது.
பிற்பகல் 3 மணிக்கு சற்று முன் மீண்டும் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது.
மூலம்- Zueritoday


