பெண் அரசியல்வாதியான சனிஜா அமேதி தனது துப்பாக்கிச் சூடு நடவடிக்கையின் காரணமாக எதிர்காலத்தில் GLPஇல் அரசியல் பதவியை வகிக்கக்கூடாது என Sotomo கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிஜா அமேதி குழந்தை இயேசுவுடன் உள்ள மரியாளின் படத்தை சுடும் காட்சியை படம்பிடித்து வெளியிட்டதற்காக சர்ச்சைக்குள்ளானார்.
இந்த நிலையில், பெரும்பான்மையான GLP வாக்காளர்கள் அமேதி, கட்சியில் இருந்து விலக்கப்பட்டதை வரவேற்று கருத்து வெளியிட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் ஜேர்மன் மொழி பேசும் சுமார் 22 சதவீத வாக்காளர்கள் மட்டுமே அமேதி தொடர்ந்து அரசியல் பதவியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
61 சதவீதம் பேர் அவர் பதவியில் இருப்பதற்கு எதிராகவும் 15 சதவீதம் பேர் ஓரளவுக்கு எதிராகவும் உள்ளனர்.
தேசிய GLP தலைவர் Jürg Grossen, அமேதியை கட்சியில் இருந்து நீக்குமாறு சூரிச் கட்சிப் பிரிவிற்கு அழைப்பு விடுத்தார்.
பெரும்பான்மையான GLP வாக்காளர்கள் (51 சதவீதம்) இந்தக் கோரிக்கையை வரவேற்றனர்.
பசுமைவாதிகள் மற்றும் SP இன் ஆதரவாளர்கள் அமேதி GLP இல் நீடிப்பதற்கு ஆதரவாக உள்ளனர்.
மூலம் – 20min