மருத்துவ அவசரநிலை காரணமாக, கேப் டவுனிலிருந்து சூரிச்சிற்குப் புறப்பட்ட எடெல்வைஸ் விமானம் திரும்பிச் சென்றுள்ளது.
அதில் பயணித்த 179 பயணிகளும் தென்னாப்பிரிக்காவிற்குத் திரும்பினர். இதன் விளைவாக, மொண்ட்ரியலுக்குச் சென்ற ஒரு சுவிஸ் விமானமும் பாதிக்கப்பட்டது.

179 பயணிகளை ஏற்றிக் கொண்டு சூரிச் புறப்பட்ட எடெல்வைஸ் விமானம், புதன்கிழமை அதிகாலையில், அது புறப்பட்ட இடமான கேப் டவுனுக்கே மீண்டும் திரும்பியுள்ளது.
விமானம் புறப்பட்டு ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் விமானக் குழுவினர் திரும்பி, அங்கோலாவின் மீது பறந்து, தென்னாபிரிக்காவிற்குத் திரும்பினர்.
Flightradar24-இன் தரவுகளின்படி, அந்த விமானம் நள்ளிரவுக்குச் சற்றுப் பிறகு அங்கு தரையிறங்கியது.
விமானத்தில் ஏற்பட்ட மருத்துவ அவசரநிலையே விமானம் திரும்பி வந்ததற்குக் காரணம் என எடெல்வைஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
எனவே, பயணிகள் கேப் டவுனில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். அதற்கு மாற்றாக, உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 7:25 மணிக்கு ஒரு விமானம் இயக்கப்பட உள்ளது.
புதன்கிழமை அன்று ஏர்பஸ் விமானம் சூரிச்சில் இல்லாததால், ஸ்விஸ் நிறுவனத்திற்காகத் திட்டமிடப்பட்டிருந்த விமானத்தை அதனால் இயக்க முடியவில்லை . அந்த விமானம் புதன்கிழமை நண்பகலில் மொண்ட்ரியலுக்குப் பறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த விமானப் பயணமும், திரும்பும் பயணமும் ரத்து செய்யப்பட்டன.
மூலம்- bluewin


