0.8 C
New York
Monday, December 29, 2025

வார இறுதி நாட்களில் முடங்கப் போகும் ரயில் சேவைகள்.

Lenzburg ரயில் நிலையத்தின் விரிவாக்கம் மற்றும் அப்பகுதியில் உள்ள ரயில் பாதைகள் புதுப்பிக்கப்படுவதால், வார இறுதிகளில் பிராந்திய மற்றும் தேசிய ரயில் சேவைகள் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயில்கள் ரத்து செய்யப்படும் அல்லது திருப்பி விடப்படும் என்பதால்,  நவம்பர் நடுப்பகுதி வரை மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படும்.

ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 2 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை 4 மணி வரை இந்த தடை நீடிக்கும்.

செப்டம்பர் 28/29 மற்றும் ஒக்டோபர் 5/6, அத்துடன் ஒக்டோபர் 19/20 மற்றும் நவம்பர் 9/10 க்கு இடைப்பட்ட நான்கு வார இறுதி நாட்களிலேயே இந்த தடைகள் ஏற்படும் என எஸ்.பி.பி.தெரிவித்துள்ளது.

பொதுவாக ஒரே நேரத்தில் ஒரு பாதை மட்டுமே இயங்கும் என்பதால், மாற்றுப்பாதை, ரத்து மற்றும் பயண நேரமமாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

சூரிச்- பாசல் மற்றும் சூரிச் – பேர்ன் இடையிலான நீண்ட தூர ரயில்களும் இதனால் பாதிக்கப்படும்.

பயணத்தைத் தொடங்கும் முன் இணையவழி கால அட்டவணையை உறுதி செய்யமாறு  SBB பரிந்துரைத்துள்ளது.

நவம்பர் 9 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் தொடக்கம் நவம்பர் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 4:45 மணி வரை, மிகப்பெரிய கட்டுப்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

Lenzburg-Othmarsingen பாதை முழுவதுமாக மூடப்படுவதால், மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஐஆர் 35 வழித்தடத்தில், ஓல்டனில் இருந்து சூரிச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் ஐஆர் 37 பாதையில் லென்ஸ்பர்க் மற்றும் சூரிச் இடையேயான ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles