29.5 C
New York
Thursday, July 2, 2026

1.6 கிலோ கொக்கைனுடன் இரு இளம் பெண்கள் கைது.

1.6 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருளை ஹொங்கொங்கிற்கு கடத்த முயன்ற பிரேசில் நாட்டு இளம் பெண்கள் இருவர் சூரிச் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் போதைப்பொருளை உடலில் மறைத்து வைத்திருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை சூரிச் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பெண்கள், 22 மற்றும் 24 வயதுடையவர்கள் என்று சூரிச் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

இரண்டு பெண்களும் சாவோ போலோவில் இருந்து சூரிச் வழியாக ஹொங்கொங் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடலில் 800 கிராம் கோகோயின் போதைப் பொருளை மறைத்து, வைத்திருந்தனர்.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles