0.9 C
New York
Thursday, February 12, 2026

மெதுவாக காரை ஓட்டிய பெண்ணுக்கு 420 பிராங் அபராதம்.

சூரிச் நகரைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர், மிக மெதுவாக வாகனம் ஓட்டியதற்காக அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மார்ச் 10 ஆம் திகதி சூரிச் நோக்கி A3 நெடுஞ்சாலையில் பயணித்த அவர் மிக மெதுவாக காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

முந்திச் செல்லும் பாதையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட குறைவான வேகத்தில், அவர் காரை ஓட்டினார் என்பதற்காகவே,  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதமாக 200 பிராங்குகள் மற்றும் சட்டச் செலவுகளுக்காக  220 பிராங்குகள் என மொத்த 420 பிராங்குகள் செலுத்த அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நெருங்கி வரும், வேகமாகச் செல்லும் வாகனத்திற்கு வழிவிடாமல் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக அவர் தண்டிக்கப்பட்டார்.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles