23.5 C
New York
Thursday, September 11, 2025

St. Gallen தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தவறு – முடிவுகள் மாற்றம்.

St. Gallen நகர நாடாளுமன்றத்திற்கு ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முடிவுகள் மாற்றப்பட்டுள்ளன.

இதனால் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு மாறியுள்ளது.

FDP நான்கு இடங்களைப் பெற்றதாக அறிவிக்கப்பட்ட போதும், அது ஒரு இடத்தை இழந்துள்ளது.

SVP கட்சிக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது. SPயின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த முடிவுகளின் பின்னர், 63 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 18 இடங்களுடன் SP வலுவான சக்தியாக உள்ளது.

இளம் லிபரல்கள்,  SVP மற்றும் FDP ஆகியவை இப்போது தலா 10 இடங்களைக் கொண்டுள்ளன.

அதே நேரத்தில் சென்டர் கட்சி 9 இடங்களுடன் நான்காவது வலுவான கட்சியாக உள்ளது.

மூலம் – Bluewin

Related Articles

Latest Articles