16.6 C
New York
Thursday, September 11, 2025

லெபனான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் – சுவிஸ் அரசு அறிவிப்பு.

லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதற்கு எதிராக பேர்னில் உள்ள சுவிஸ் மத்திய வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது, இதன் விளைவாக நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

“லெபனானில் நிலைமை பாதுகாப்பற்றது மற்றும் ஆபத்தானது. பயணம் பரிந்துரைக்கப்படவில்லை” என்று நேற்று மாலை சுவிஸ் வெளியுறவு அமைச்சு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அங்கு இருப்பவர்கள், முடிந்தால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்றும், பெய்ரூட்டில் உள்ள சுவிஸ் தூதரகம் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவிற்காக திறக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை,  இஸ்ரேலுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறும் சுவிஸ் வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

எந்த நேரத்திலும் நிலைமை மோசமடைவது சாத்தியம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய அரசாங்கம் முன்னர் முழு நாட்டிற்கும் சிறப்பு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

மூலம் – the swiss times

Related Articles

Latest Articles