23.5 C
New York
Thursday, September 11, 2025

தீ எச்சரிக்கையால் அவசரமாக வெளியேறிய கிரான்ட் கவுன்சில் உறுப்பினர்கள்.

ஆர்காவ்  கிரான்ட் கவுன்சில்  கூட்டம் நேற்று பிற்பகல் நடந்த கொண்டிருந்த போது தீவிபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கட்டடத்தை விட்டு வெளியேறினர்.

சரியாக பிற்பகல் 3 மணியளவில், கிராண்ட் கவுன்சில்  தலைவர், அடித்தளத்தில் புகை உருவானதால், கட்டடத்தை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று அறிவித்தார்.

SVP கிராண்ட் கவுன்சிலர் மிரோ பார்ப், உரையாற்றிக் கொண்டிருந்த போது விடுக்கப்பட்ட இந்த அவசர அறிவிப்பினால், அனைவரும், கட்டடத்தை விட்டு வெளியேறினர்.

அவர்கள் வெளியேற சென்ற பின்னர் தான், தீயணைப்புத் துறையின் ஒரு பயிற்சி என்று அறிவிக்கப்பட்டது.

அவசர நிலையில் உறுப்பினர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை விளக்கும் நோக்கில் இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.

இதனால் கிரான்ட் கவுன்சில் நடவடிக்கைகள் 20 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles