அமெரிக்க காப்பறுதி நிறுவனமான அலையன்ஸ், வருடாந்த பூகோள செல்வந்த தரவரிசையை வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான அதன் 15 வது அறிக்கை, 2023 ஆம் ஆண்டின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டில், கணக்கெடுக்கப்பட்ட 60 நாடுகளில் உள்ள செல்வந்த குடும்பங்களின் மொத்த சொத்துக்கள் 7.6% உயர்ந்துள்ளன,
வங்கிக் கணக்குகள், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதிய நிதிகள், பத்திரங்கள் (பங்குகள், பத்திரங்கள் மற்றும் முதலீட்டு நிதிகள்) உள்ளிட்ட மொத்த சொத்துக்களை இந்தக் கணக்கில் சேர்க்கப்பட்டு, கடன்கள் கழிக்கப்படுகின்றன.
இதற்கமைய, அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு அமெரிக்கரும் சராசரியாக 260,000 யூரோ அல்லது (CHF 247,000) வைத்துள்ளனர்.
முந்தைய பன்னிரண்டு மாதங்களில் இது 9.8% அதிகரித்து, சுவிட்சர்லாந்தை (€255,000) முந்தி முதல் இடத்தில் உள்ளது.
டென்மார்க் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளும், €172,000 வுடன் மூன்றாமிடத்தில் உள்ளன.
தைவான் (€149,000) அடுத்த இடத்தில் உள்ளது.
பத்து இடங்களில் நியூசிலாந்து, சுவீடன், கனடா, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் உள்ளன.
இத்தாலி 14வது இடத்திலும், பிரான்ஸ் 16வது இடத்திலும், ஜெர்மனி 18வது இடத்திலும் உள்ளன.
மூலம் – Swissinfo