6.6 C
New York
Sunday, November 15, 2026

மின்னணு வாக்குப்பதிவில் இணைந்து செயற்படவுள்ள சுவிஸ் போஸ்ட், சுவிஸ்கொம்.

மின்னணு வாக்குப்பதிவில் சுவிஸ் போஸ்ட் மற்றும் சுவிஸ்கொம் என்பன இணைந்து செயற்பட உள்ளன. இதில், 2028 முதல் உள்கட்டமைப்பின் சில கூறுகளை சுவிஸ்கொம் இயக்கும்.

போட்டி ஒப்பந்தப்புள்ளியைத் தொடர்ந்து, தொலைத்தொடர்பு நிறுவனமான சுவிஸ்கொமுடன் இணைந்து செயல்படும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுவிஸ் போஸ்ட் வியாழக்கிழமை அறிவித்தது.

- Advertisement -

2028 முதல், பொது வாக்கெடுப்பு கேள்விகள், திகதிகள் மற்றும் தேர்தல் வேட்பாளர்களின் விவரங்கள் போன்ற பொதுத் தகவல்களை சுவிஸ்கொம் தனது சுவிஸ் தரவு மையங்களில் செயலாக்கும்.

சுவிஸ் போஸ்ட், தனது பங்கிற்கு, மின்னணு வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குகளின் சரிபார்ப்புத்தன்மை மற்றும் இரகசியத்தன்மையை உறுதி செய்வதற்கான அமைப்புகள் போன்ற முக்கியமான கூறுகளின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளும்.

இவ்விரு நிறுவனங்களுக்கும் வாக்காளர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கோ அல்லது அவர்களின் வாக்குகளின் உள்ளடக்கத்திற்கோ அணுகல் இருக்காது. வாக்காளர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் அநாமதேயமாகவே இருக்கும், மேலும் அனைத்து வாக்குகளும் குறியாக்கம் செய்யப்படும்.

மேலும், மின்னணு வாக்குப்பதிவிற்காக மாகாணங்களின் ஒரே ஒப்பந்தப் பங்காளராக சுவிஸ் போஸ்ட் தொடர்கிறது. அத்துடன், அமைப்பு, மென்பொருள் உருவாக்கம் மற்றும் மூலக் குறியீடு ஆகியவற்றிற்கான ஒட்டுமொத்தப் பொறுப்பையும் அது தக்க வைத்துக் கொள்ளும்.

சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வரும் அல்லது திட்டமிடப்பட்டுள்ள சுவிஸ் மாகாணங்களில், இந்த வெளிப்பணி ஒப்படைப்பின் விளைவாக எந்த மாற்றங்களும் இருக்காது. நவம்பர் 29 அன்று நடைபெறவிருக்கும் அடுத்த தேசியத் தேர்தலில், நியூஷாடெல், லூசெர்ன், சென் காலன், கிராபுண்டன் மற்றும் துர்காவ் ஆகிய கண்டோன்களில் உள்ள தகுதியுள்ள வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு மூலம் பங்கேற்கலாம்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles