17.2 C
New York
Wednesday, September 10, 2025

ஆண் ஒருவரை ஜன்னல் வழியாக தள்ளி விட்ட பெண்.

Müllheimerstrasse இல் பெண் ஒருவர் ஜன்னல் வழியாக தள்ளி விட்டதில், மாடியில் இருந்து கீழே விழுந்த ஆண் படுகாயம் அடைந்துள்ளார்.

நேற்று இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலாவது மாடியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு இரண்டு பேரும் மது போதையில் இருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் போது,  44 வயதுடைய பெண், யன்னல் வழியாக 31 வயதுடைய ஆணை தள்ளி விட்டார்.

இதனால், படுகாயமடைந்த ஆண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles