Artherstrasse இல் ட்ரக்கும் காரும் மோதிக் கொண்ட விபத்தில், கார் சாரதி உயிரிழந்தார்.
இந்த விபத்து நேற்றுக் காலை, 8:00 மணியளவில், இடம்பெற்றது.
58 வயதுடைய சாரதி Zug இல் இருந்து Walchwil நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது, பாதையை கடந்து, எதிரே வந்த டிரக் மீது நேருக்கு நேர் மோதியதாக Zug சட்ட அமுலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தை அடுத்து காருக்குள் சிக்கியிருந்த சாரதியை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
விரைவான மருத்துவ உதவி வழங்கப்பட்ட போதும், 58 வயதான நபர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்தை அடுத்து Artherstrasse வீதி பல மணி நேரம் மூடப்பட்டது.
மூலம் -zueritoday.