23.5 C
New York
Thursday, September 11, 2025

இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியான ஏவுகணைத் தாக்குதல்.

இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

நேற்றிரவு இஸ்ரேல் மீது 200இற்கும் அதிகமான ஏவுகணைகள்  ஈரானில் இருந்து ஏவப்பட்டன.

அவற்றில் பலவற்றை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

எனினும், பல ஏவுகணைகள் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் விழுந்து வெடித்துள்ளன.

இஸ்ரேலின் மொசாட் தலைமையகம், விமானப்படைத் தளங்களை இலக்கு வைத்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலுக்கு மோசமான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலியப்  பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஈரான் பெரிய தவறு செய்து விட்டதாகவும், அதற்கு ஈரான் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும்“ தெரிவித்துள்ளார்.

அதேவேளை இஸ்ரேலில் ரயில் நிலையம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles