-4.6 C
New York
Sunday, December 28, 2025

முழுநேர வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்.

முழுநேர வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று Fribourg  பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

100%  வேலைச் சுமை உள்ளவர்களுக்கு, ஏனையவர்களை விட  புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று புதிய ஆய்வில்,  அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனினும், இதற்கான காரணங்கள் தெளிவாக இல்லை.

ஆண்களை விட பெண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் என்றும், ஆராய்ச்சியாளர்கள் நேற்று தெரிவித்தனர்.

Swiss National Science Foundation (SNSF) ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வு அறிவியல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி, முழுநேர வேலை செய்யும் பெண்களுக்கு, குடும்பம் மற்றும் குழந்தைகளை முழுநேரமாக கவனித்துக் கொள்ளும் பெண்களை விட, புற்றுநோய் அபாயம் கணிசமாக அதிகமாக உள்ளது.

அதேவேளை,  சுயதொழில் செய்யும் ஆண்கள், வேலை செய்யும் ஆண்களை விட புற்றுநோயை எதிர்கொள்ளும் வாய்ப்பு குறைவாக உள்ளது.

14 ஐரோப்பிய நாடுகளில் 1915ஆம் ஆண்டுக்கும் 1945 ஆம் ஆண்டுக்கும்  இடையில் பிறந்த 12,500 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களின் வாழ்க்கையை  பகுப்பாய்வு செய்வதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்தனர்.

இந்த ஆய்வுகள்  வேலைச் சுமைக்கும் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்திற்கும் உள்ள தொடர்பை தெளிவுபடுத்தியுள்ளது.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles