சூரிச்சில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மூன்று குழந்தைகளை கத்தியால் தாக்கி காயப்படுத்திய நபரை, விளக்கமறியலில் வைக்குமாறு சூரிச் சட்டமா அதிபர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
23 வயதான அந்த நபர், சுவிட்சர்லாந்தில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவராவார்.
அவரை விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் அலுவலகம் விண்ணப்பித்தது.
இந்த மனு தொடர்பாக நீதிமன்றம் 48 மணி நேரத்தில் முடிவெடுக்கும்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் பகல் பராமரிப்பு நிலையத்திற்குச் செல்லும் குழந்தைகள் குழுவை , அந்த நபர் கத்தியால் தாக்கியிருந்தார்.
இதில், ஐந்து வயது சிறுவன் படுகாயமடைந்ததுடன் மேலும் ஐந்து வயதுடைய இரு சிறுவர்கள் காயங்களுக்கு உள்ளாகினர்.
காயமடைந்த குழந்தைகள் அனைவரும் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மூலம்- Swissinfo