Ticino கன்டோனில் உள்ள தனியார் தோட்டத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இரு இளையோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
எரியக் கூடிய திரவத்தைப் பயன்படுத்தி, பார்பிக்யூ அடுப்பிற்குத் தீ மூட்ட முயன்ற போது, 18 வயதுடைய சுவிஸ் இளைஞனுக்கு பலத்த எரிகாயம் ஏற்பட்டது.
- Advertisement -

அருகில் இருந்த 20 வயதுடைய சுவிஸ் பெண்ணும் படுகாயமடைந்தார்.
நேற்று பிற்பகல் 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
ஆரம்ப மருத்துவ மதிப்பீடுகளின்படி, இளம் பெண் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.
அதே நேரத்தில் ஆணின் நிலையும் மோசமாக உள்ளது.
இந்த தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மூலம் – 20min.


