16.6 C
New York
Thursday, September 11, 2025

லெபனானில் சுவிஸ் கண்காணிப்பாளர்களின் நிலை என்ன?

லெபனானில் நிலைகொண்டுள்ள மூன்று சுவிஸ் இராணுவ கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு லெபனானில் உள்ள நகுராவில் உள்ள ஐ.நா அமைதிகாக்கும் படையின் தலைமையகத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் வியாழனன்று ஷெல் தாக்குதல் நடத்தியதில் இலங்கையைச் சேர்ந்த  இரண்டு ஐ.நா. வீரர்கள் காயமடைந்தனர்.

லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் உள்ள ஐ.நா நீல ஹெல்மெட் படையினரின்  முகாமுக்கு அருகே ஷெல் தாக்குதல் நடந்தப்பட்டதாக,  வெளிநாட்டில் அமைதி ஆதரவு நடவடிக்கைகளை நடத்துவதற்கு பொறுப்பாக உள்ள SWISSINT  இன், தகவல் தொடர்புத் தலைவர் டானியல் செக்லர் தெரிவித்தார்.

தெற்கு லெபனானில் உள்ள மூன்று சுவிஸ் அதிகாரிகள் நீல பெரட்கள் என்று அழைக்கப்படும் இராணுவ பார்வையாளர்களாக பணிபுரிகின்றனர்.

ஐ.நாவின் நீல ஹெல்மெட்படையினர்  போலல்லாமல், நீல பெரட்டுகள் நிராயுதபாணிகளாக பணியாற்றுவர்.

மத்திய கிழக்கு முழுவதும் 13 சுவிஸ் நீல  பெரட்டுகள் உள்ளனர்.

லெபனானைத் தவிர, அவர்கள் இஸ்ரேல், சிரியா, ஜோர்டான் மற்றும் எகிப்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மூலம் -Swissinfo

Related Articles

Latest Articles