-2 C
New York
Friday, February 13, 2026

ஹிஸ்புல்லாவுக்கு தடைவிதிக்க கோருகிறது செனட் குழு.

சுவிட்சர்லாந்தின் செனட்  பாதுகாப்புக் கொள்கைக் குழு லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அந்தக் குழுவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இந்த யோசனைக்கு ஆதரவாக  10  உறுப்பினர்கள் வாக்களித்துடன், மூன்று பேர் வாக்களிக்கவில்லை.

செனட்டின் பாதுகாப்புக் கொள்கைக் குழு நிலைமை மாறியுள்ளதாக நம்புகிறது.

ஏற்கனவே ஹமாஸ் அமைப்பிற்கு தடைவிதிக்கக் கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது ஹிஸ்புல்லா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மூலம் -Swissinfo

Related Articles

Latest Articles