அறுகம்பையில் சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்ததை அடுத்து பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகள் பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
தாக்குதல் நடக்கக் கூடும் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதால், அறுகம்பைக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா தனது நாட்டவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அறுகம்பையில் அதிகளவில் கூடுகின்ற இஸ்ரேலியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை அடுத்து, அறுகம்பை மற்றும் இலங்கையின் தென்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் இருந்து இஸ்ரேலியர்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய தேசிய பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளது.
அதேவேளை புலனாய்வு எச்சரிக்கைகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.