15.7 C
New York
Sunday, September 27, 2026

பனிச்சரிவில் சிக்கிய ரயில்- சனி வரை சேவைகள் இல்லை.

வலைஸின் கோபன்ஸ்டீன் அருகே ஏற்பட்ட பனிச்சரிவினால், ரயில் தடம் புரண்டதை அடுத்து ரயில் சேவைகளை மீளத் தொடங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நேற்றுக்காலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

- Advertisement -

இந்த சம்பவத்தின் காரணமாக, கோபன்ஸ்டீன் மற்றும் பிரிக் இடையேயான ரயில் பாதை சனிக்கிழமை காலை வரை மூடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகள் மாற்று பேருந்துகளுக்கு மாற வேண்டும். லோட்சென்டல் பிராந்திய பாதுகாப்பு சேவையும் கோபன்ஸ்டீன் மற்றும் கேம்பல்-ஸ்டெக் இடையேயான வீதியை மூடியுள்ளது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles