22.8 C
New York
Tuesday, September 9, 2025

குருந்தூர் மலை பொங்கல் விழாவில் பொலிஸார், அதிரடிப்படையினர், இனவாதிகள் அட்டகாசம்!

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் உள்ள ஆதி சிவன் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு நடத்த சென்றிருந்த பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளை பொலிஸார், அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்தியதுடன் பொங்கல் விழாவிற்கு வந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்தி கற்பூரத்தை சப்பாத்து காலால் அனைத்து அராஜகம் புரிந்துள்ளனர்.

குருந்தூர் மலை ஆக்கிரமிக்கப்பட்டு பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்புடன் அங்கு விகாரை ஒன்றும் நீதிமன்ற உத்தரவை மீறி அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இன்றைய தினம் தமிழர்களால் குருந்தூர் மலையில் உள்ள ஆதி சிவன் பொங்கல் விழா ஒன்றினை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

Related Articles

Latest Articles