சுவிஸ் நெடுஞ்சாலை வலையமைப்பு விரிவாக்கத் திட்டம் குறித்து நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பு தொடர்பான பிரசாரங்களுக்கு மில்லியன்கணக்கான பிராங்குகள் செலவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 24ஆம் திகதி நடக்கவுள்ள இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக, இந்த திட்டத்திற்கு ஆதரவானவர்களும் எதிர்ப்பானவர்களும் அதிகளவில் செலவிடுவதாக தெரியவந்துள்ளது.
வாக்கெடுப்பில், ஆம் என்ற வாக்களிக்கக் கோரும் குழு மட்டும் இதுவரை 3.4 மில்லியன் பிராங்குகளுக்கு மேலாக செலவிட்டிருப்பதாக பெடரல் தணிக்கை அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கான வாக்கெடுப்பில், ஆம் என வாக்களிக்க கோரும் அணி செலவிடக் கூடிய அதிகபட்ச தொகை 4.1 மில்லியன் பிராங்குகள் ஆகும்.
அதேவேளை இல்லை என வாக்களிக்க கோரும் அணி, 2.7 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை செலவிட்டுள்ளது.
சுவிஸ் டிரான்ஸ்போர்ட் கிளப் இதில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான பிராங்குகளை வழங்குகிறது.
SP, பசுமைவாதிகள், கிரீன்பீஸ் மற்றும் Umverkehr அமைப்புகளால் ஏனைய தொகையை வழங்குகின்றன.
மூலம் – Zueritoday