Frauenfeld இல் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக Thurgau கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
50இற்கும் அதிகமான தீயணைப்பு பிரிவினர் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்ட போது 62 வயதுடைய ஆணும், 58 வயதுடைய பெண்ணும், 18 வயதுடைய பெண்ணும் இருந்தனர்.
அவர்கள் புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மூலம் – 20min