சூரிச் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்ற பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.49 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
லிஸ்பனில் இருந்து சூரிச் வந்த TAP932 விமானம், தரையிறங்குவதற்கு அனுமதி அனுமதி அளிக்கப்பட்டது.
விமானம் அதற்குத் தயாராகிக் கொண்டிருந்த போது, ஓடுபாதையில் மற்றொரு விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் கட்டுப்பாட்டுக் கோபுரத்துக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அந்த விமானத்தை தரையிறங்காமல் வட்டமடிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட்டிருக்கும் என்று எதிர்பார்த்தே அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அரை மணிநேரத்திற்குப் பின்னர் விமானம் பத்திரமாக சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னரே பயணிகள் நிம்மதியடைந்தனர்.
இந்தச் சம்பவத்தை Skyguide உறுதிப்படுத்தியுள்ளது.
மூலம் – Zueritoday

