நீலநிற கடதாசி சாரதி அனுமதிப்பத்திரம் வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகி விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1 ஆம் திகதி முதல், கிரெடிட் கார்ட் அளவிலான புதிய சாரதி அனுமதிப்பத்திரம் மட்டுமே செல்லுபடியாகும்.
இன்னும் பழைய கடதாசி சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருப்பவர்கள், வெள்ளிக்கிழமை முதல் 20 பிராங்குகளை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் இன்னமும் ஆயிரக்கணக்கான பழைய அனுமதிப்பத்திரங்கள் புழக்கத்தில் உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
ஓகஸ்ட் மாத நிலவரப்படி, சுமார் 59,000 பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் புழக்கத்தில் இருந்தன.
சூரிச் கன்டோனில் உள்ள வீதிப் போக்குவரத்து அலுவலகத்தின் தகவலின்படி, காலக்கெடு நிறைவடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வரை, இன்னமும் புதுப்பிக்கப்படாத 52,000 நீல அனுமதிப்பத்திரங்கள் புழக்கத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்களில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கவோ, இனி வாகனம் ஓட்டுவதில்லை எனத் தீர்மானித்திருக்கவோ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் – Zueritoday

