Migros இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 பொருட்களை குறைந்த ( தள்ளுபடி) விலையில் விற்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நேற்றுத் தொடக்கம் பொருட்களை தள்ளுபடி விலையில் விற்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதற்கமைய தற்போது, 76 உற்பத்திகளை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்ய முடியும்.
வெள்ளரி, அப்பிள், பியேர்ஸ், கரட் உள்ளிட்டவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
பாண், இறைச்சி , மீன் போன்றனவும் தொடர்ந்து குறைக்கப்படும்.
மொத்தமாக, அடுத்த சில மாதங்களில் 1000 க்கும் மேற்பட்ட அன்றாட தயாரிப்புகளை தள்ளுபடி விலைக்கு விற்போம் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மூலம் -Bluewin

