2022 ஆம் ஆண்டில் 26 சுவிஸ் கன்டோன்களினது பொருளாதாரங்களும் வளர்ச்சியடைந்துள்ளன.
வளர்ச்சியில் வேறுபாடுகள் இருந்தாலும், எல்லா கன்டோன்களும் பொருளாதார ரீதியாக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
2022 இல், சுவிட்சர்லாந்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, முந்தைய ஆண்டைவிட 3% அதிகரித்துள்ளது.
Jura மற்றும் Neuchâtel கன்டோன்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் வலுவாக வளர்ச்சியடைந்துள்ளது. அங்கு 5.8% வளர்ச்சி பதிவாகியுள்ளது.
Vaud கன்டோன் குறைந்தளவு வளர்ச்சியை (0.1%) பதிவு செய்துள்ளது.
ஏனைய கன்டோன்களில், Valais (5.2%), Graubünden (4.9%), Ticino (4.7%) Lucerne (4.6%),என்பன அதிக வளர்ச்சியை கொண்டிருக்கின்றன.
Glarus (1.8%), Basel City (1.6%), Aargau (1.6%), Basel Country (0.8%) மற்றும் Vaud (0.1%) என்பன குறைந்தளவு வளர்ச்சியை பதிவு செய்திருக்கின்றன.
Zurich கன்டோன் 3.8% வளர்ச்சியுடன் நடுநிலையில் இருக்கிறது.
மூலம் – Swissinfo

