2022 ஆம் ஆண்டில், எட்டு பேரில் ஒருவர் அல்லது சனத்தொகையில் 12.1% பேர், குறைந்தபட்சம் ஒரு முறையாவது நிலுவையுடன் இருந்துள்ளனர்.
அந்த ஆண்டில் மொத்தத்தில், 40.9% மக்கள் குறைந்தபட்சம் ஒரு வகையான கடனைக் கொண்டிருந்தனர்.
மத்திய புள்ளியியல் அலுவலகம் (FSO) செவ்வாயன்று வெளியிட்ட தரவுகளில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிக் கட்டணம், மற்றும் சுகாதார காப்புறுதி கட்டண நிலுவைகள் இதில் அடங்கும்.
அடமானங்கள் (பிரதான குடியிருப்பு அல்ல), வாகன குத்தகைகள், சிறிய அல்லது நுகர்வோர் கடன்கள், தவணை செலுத்துதல்கள், பராமரிப்பு செலுத்துதல்கள், குடும்பம் அல்லது நண்பர்களுக்கான கடன்கள் மற்றும் வங்கி மேலதிகப் பற்று அல்லது செலுத்தப்படாத கடனட்டை கட்டணங்களை பகுப்பாய்வு செய்ததில், 40.9% மக்கள் குறைந்தபட்சம் ஒரு கடனையாவது பெற்றுள்ளனர்.
அதன்படி, 5.5% மக்கள் வரி நிலுவைத் தொகையுடன் வசித்து வந்தனர்.
மேலும் 4.4% பேர் சுகாதார காப்புறுதி நிறுவனங்களில் நிலுவை வைத்துள்ளனர்.
மூலம் – Swissinfo

