Regensdorf இல் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மக்டொனால்டுக்கு அடுத்த சந்திப்பில் நேற்று இரவு 7:30 மணிக்கு சற்று முன்னர் இந்த விபத்து ஏற்பட்டது.
பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.
ஒருவர் இன்னும் வாகனம் ஒன்றில் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 வாகனங்கள் மோதிக் கொண்ட இந்த விபத்தில் சிக்கியதில், 3 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மூலம் – Zueritoday

