16.5 C
New York
Wednesday, September 10, 2025

கார்கள் மோதி கோர விபத்து – 2 பேர் பலி.

Andeer அருகே A13 நெடுஞ்சாலையில்  இரண்டு கார்கள் மோதிய விபத்தில்  2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடந்த இந்த விபத்தில் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

69 வயதுடைய பெண் சாரதி ஒருவர், தெற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த காரும், 43 வயதுடைய ஆண் சாரதி ஒருவர் San Bernardino நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த காரும், வளைவு ஒன்றில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் 43 வயதுடைய ஆண் சாரதியும் அவரது காரில் பயணம் செய்தவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அந்தக் காரில் இருந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

69 வயதுடைய பெண் சாரதி  மற்றும் அவரது காரில் பயணித்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles