-5.7 C
New York
Sunday, December 28, 2025

தொற்றுநோய் பரவியதால் தனிமைப்படுத்தப்பட்டது Bremgarten இராணுவ முகாம்.

Bremgarten AG இல் உள்ள இராணுவ முகாமில்  norovirus தொற்று ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள 35 இராணுவத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் இங்குள்ள படையினர் மத்தியில் norovirus தொற்று மற்றும் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, முகாமில் இருந்த படையினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் கூறினார்.

இதனால், முகாமில் இருந்த படையினர் வார இறுதியில் வீடுகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

ஏற்கனவே கடந்த மாத தொடக்கத்தில் Bière இல் உள்ள ஆட்டிலறி டிவிசன் 1இல் norovirus தொற்று ஏற்பட்டிருந்தது.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles